Tuesday, December 21, 2010

மழை காலம் !

கதிரவன் கண்ணாமூச்சி ஆடும் காலம்!
வானத்தின் நீர் உதிர் காலம் !
கையில் குடை வீடுகள் முளைக்கும் காலம் !
வழியில் குடிசை வீடுகள் மிதக்கும் காலம்!
நிவாரண நிதியில் அரசியல் முதளைகளுக்கு
பண மழைக் காலம்!
பூமி பூக்களை வானம் ஆசிர்வதிக்கும் காலம் !
அளவு மீறினால் பூமி பூக்களுக்கு வானம்
மலர்வளையம் வைக்கும் காலம் !

Thursday, November 18, 2010

இறைவா!

இருட்டுக்குள் வெளிச்சமாய் !
வெளிச்சத்தில் வெப்பமாய் !
வெப்பத்தை உணரும் உடலாய்!
உடலுக்குள் உயிராய்!
எனை நீ தந்தாலும்
உண்மையில் வெறுமையாய் உணர்தேன்
என்னுள் உன்னை -இறைவா !
உணர்வேனோ
உனக்குள் என்னை !

Monday, October 4, 2010

நிழல்

வெளிச்சத்தில் தெரியும் இருட்டு !
இருட்டுக்குள் இறந்து போகும் பிறப்பு !
பிறப்பு முதல் இறப்பு வரை கைவிடாத நட்பு !
நட்பு முதல் பகைமை வரை உலக உயிருக்கெல்லாம் ஒரே சிறப்பு !
அதுவே உண்மையான கடவுளின் இருப்பு !

Monday, September 20, 2010

வறுமை !

இல்லாதவனிடம் இருப்பது !
இருப்பவனிடம் இல்லாதது !
பசித்து உண்பவன் பாக்கியசாலி !
பசிக்காமல் உண்பவன் நோயாளி !
இல்லாமையால் கிழிந்திருக்கும் உடை!
இருந்தும் நாகரீகத்தால் கிழிந்திருக்கும் உடை!
திறந்த வெளியில் மரங்கள் தரும் குளிர்ந்த காற்றில் படுத்தவுடன் உறக்கம் !
குளீருட்டப்பட்ட அறையில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் இல்லை உறக்கம்!
இல்லாதவனிடம் இருப்பது இருப்பவனிடம் இல்லாதது
உயிரோட்டம் !
உணர்வு !
உறக்கம்!
இதுவல்லவோ வறுமை !!

Saturday, August 21, 2010

மரமே !

ஆருயிர் காக்கும்
ஓர் உயிரே !
மண்ணை சுவாசித்து
மலர்களாய் பூத்திருக்கும்
மரங்களே !
குழந்தையில் தொட்டிலாய் !
இளமையில் கட்டிலாய்
முதுமையில் உன்று கோலாய்!
உயிரை வளர்க்கும் உணவாய்!
உடலை எரிக்கும் கட்டையாய்!
கடைசிவரை துணை நிற்கும் உன்னை வெட்டி வீழ்த்தும் அரக்கனாய்
பலமுறை இருந்தாலும் நட்டு வளர்க்கும் மனிதனாய்
ஒரு முறையாவது இருக்க விரும்புகிறேன் !