Saturday, August 21, 2010

மரமே !

ஆருயிர் காக்கும்
ஓர் உயிரே !
மண்ணை சுவாசித்து
மலர்களாய் பூத்திருக்கும்
மரங்களே !
குழந்தையில் தொட்டிலாய் !
இளமையில் கட்டிலாய்
முதுமையில் உன்று கோலாய்!
உயிரை வளர்க்கும் உணவாய்!
உடலை எரிக்கும் கட்டையாய்!
கடைசிவரை துணை நிற்கும் உன்னை வெட்டி வீழ்த்தும் அரக்கனாய்
பலமுறை இருந்தாலும் நட்டு வளர்க்கும் மனிதனாய்
ஒரு முறையாவது இருக்க விரும்புகிறேன் !

Thursday, August 5, 2010

ரசிகன்

கடவுளே!

*உன்னை வணங்க கோவிலுக்குச் சென்றால்

சிலையாய் நிற்கும் உன்னை

ரசிக்க மட்டுமே முடிகிறது!

உன்னை வடித்த சிற்பியையே

கடவுளாய் வணங்க தோன்றுகிறது !

*மண்ணை படைத்த உன்னைவிட -அதை

குழைத்து குவளை செய்யும் குயவனையே

கடவுளாய் நினைக்க தோன்றுகிறது!

*தமிழ் மொழியை நீ கொடுத்தாலும்

அம்மொழியில் காவியம் கொடுத்த

கடவுள்கள்தான் எத்தனை பேர் ?!

என்னை படைத்து உன்னை உருவாக்கிக்கொண்ட

கடவுளே!

ரசிப்பவன் படைப்பாளியாகின்றான் !

படைத்தவன் நீயாகின்றான் !

நான் நீயாக.........

என்னை ரசிகனாக்கு !!