Tuesday, December 21, 2010

மழை காலம் !

கதிரவன் கண்ணாமூச்சி ஆடும் காலம்!
வானத்தின் நீர் உதிர் காலம் !
கையில் குடை வீடுகள் முளைக்கும் காலம் !
வழியில் குடிசை வீடுகள் மிதக்கும் காலம்!
நிவாரண நிதியில் அரசியல் முதளைகளுக்கு
பண மழைக் காலம்!
பூமி பூக்களை வானம் ஆசிர்வதிக்கும் காலம் !
அளவு மீறினால் பூமி பூக்களுக்கு வானம்
மலர்வளையம் வைக்கும் காலம் !

Thursday, November 18, 2010

இறைவா!

இருட்டுக்குள் வெளிச்சமாய் !
வெளிச்சத்தில் வெப்பமாய் !
வெப்பத்தை உணரும் உடலாய்!
உடலுக்குள் உயிராய்!
எனை நீ தந்தாலும்
உண்மையில் வெறுமையாய் உணர்தேன்
என்னுள் உன்னை -இறைவா !
உணர்வேனோ
உனக்குள் என்னை !

Monday, October 4, 2010

நிழல்

வெளிச்சத்தில் தெரியும் இருட்டு !
இருட்டுக்குள் இறந்து போகும் பிறப்பு !
பிறப்பு முதல் இறப்பு வரை கைவிடாத நட்பு !
நட்பு முதல் பகைமை வரை உலக உயிருக்கெல்லாம் ஒரே சிறப்பு !
அதுவே உண்மையான கடவுளின் இருப்பு !

Monday, September 20, 2010

வறுமை !

இல்லாதவனிடம் இருப்பது !
இருப்பவனிடம் இல்லாதது !
பசித்து உண்பவன் பாக்கியசாலி !
பசிக்காமல் உண்பவன் நோயாளி !
இல்லாமையால் கிழிந்திருக்கும் உடை!
இருந்தும் நாகரீகத்தால் கிழிந்திருக்கும் உடை!
திறந்த வெளியில் மரங்கள் தரும் குளிர்ந்த காற்றில் படுத்தவுடன் உறக்கம் !
குளீருட்டப்பட்ட அறையில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் இல்லை உறக்கம்!
இல்லாதவனிடம் இருப்பது இருப்பவனிடம் இல்லாதது
உயிரோட்டம் !
உணர்வு !
உறக்கம்!
இதுவல்லவோ வறுமை !!

Saturday, August 21, 2010

மரமே !

ஆருயிர் காக்கும்
ஓர் உயிரே !
மண்ணை சுவாசித்து
மலர்களாய் பூத்திருக்கும்
மரங்களே !
குழந்தையில் தொட்டிலாய் !
இளமையில் கட்டிலாய்
முதுமையில் உன்று கோலாய்!
உயிரை வளர்க்கும் உணவாய்!
உடலை எரிக்கும் கட்டையாய்!
கடைசிவரை துணை நிற்கும் உன்னை வெட்டி வீழ்த்தும் அரக்கனாய்
பலமுறை இருந்தாலும் நட்டு வளர்க்கும் மனிதனாய்
ஒரு முறையாவது இருக்க விரும்புகிறேன் !

Thursday, August 5, 2010

ரசிகன்

கடவுளே!

*உன்னை வணங்க கோவிலுக்குச் சென்றால்

சிலையாய் நிற்கும் உன்னை

ரசிக்க மட்டுமே முடிகிறது!

உன்னை வடித்த சிற்பியையே

கடவுளாய் வணங்க தோன்றுகிறது !

*மண்ணை படைத்த உன்னைவிட -அதை

குழைத்து குவளை செய்யும் குயவனையே

கடவுளாய் நினைக்க தோன்றுகிறது!

*தமிழ் மொழியை நீ கொடுத்தாலும்

அம்மொழியில் காவியம் கொடுத்த

கடவுள்கள்தான் எத்தனை பேர் ?!

என்னை படைத்து உன்னை உருவாக்கிக்கொண்ட

கடவுளே!

ரசிப்பவன் படைப்பாளியாகின்றான் !

படைத்தவன் நீயாகின்றான் !

நான் நீயாக.........

என்னை ரசிகனாக்கு !!

Saturday, July 24, 2010

பூக்கள் மீண்டும் பூப்பதில்லை !

உதிர்த்துவிட்ட இதழ்களை ஒட்டிக்கொண்டு மீண்டும் இங்கே
பூக்கள் பூப்பதில்லை!
மடிந்துவிட்ட வண்ணத்துப் பூச்சி
மீண்டும் உயிர்ப்பித்து
பறப்பது யில்லை !
சிதறிவிட்ட சிலைகள் கூட
மீண்டும் உருபெற்று
உருவம்பெருவது இல்லை
இழந்துகொண்டு இருக்கிறாய் நீயும் உணர்ந்து விடு !உயிரின் மதிப்பை!
இந்த ஒரு நிமிடம் கவலை மறந்து வாழ்த்தி விடு !வாழ்ந்து விடு!

Friday, July 23, 2010

செலவு செயுங்கள் !

மழை துளியை சேகரித்து
கடலை பெறலாம் !
மண்ணை சேகரித்து
மாளிகை பெறலாம் !
தீபங்களை சேகரித்து
சூரியன் பெறலாம்!
எழுத்துக்களை சேகரித்து
கவிதை பெறலாம் !
வண்ணங்களை சேகரித்து
ஓவியம் பெறலாம்!- ஆனால்
அன்பை செலவு செய்தால்தான்
வாழ்வில் இன்பம் பெறலாம் !

Thursday, July 8, 2010

என்ன தவம் செய்தேனோ?

மொட்டுவிட்ட பூக்களின் மூச்சுக்காற்றை சேகரித்து
என் உயிராக்கி !
பொங்கிவிட்ட தூய அன்பில் ஒரு துளி சேர்த்து
எனை உருவாக்கி !
செந்நிற மெத்தையிலே சித்திரமாய் வளர்த்து !
பத்துத்திங்கள் கழித்து பத்திரமாய் பெற்றெடுத்து!
மகள் என்ற உறவாக்கி!
உள்ளங்கையில் உலகத்தை கொடுத்து !
உயர்ந்த ஞானத்தைக் கொடுத்து !
எக்குறையும் இல்லாது
எனை படைத்த என் பெற்றோரை
பெற்றொராய் பெற்றிருக்க
என்ன தவம் செய்தேனோ?

Sunday, July 4, 2010

காலமே!

காலமே!

* மாறாத மாற்றங்களை

வழங்கிக்கொண்டு !

* திரும்பி வராத நாட்களை

விழுங்கிக்கொண்டு!

* என்றும் தீராத நினைவுகளுடன்

கொஞ்சம் கொஞ்சமாய்

நழுவிக்கொண்டிருக்கும்

காலமே!